Published : 13 Jun 2016 08:23 AM
Last Updated : 13 Jun 2016 08:23 AM

வண்டலூர் பூங்காவில் கால் ஊனமான ஆமைக்கு சக்கரம் பொருத்தப்பட்டது

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கால் ஊனமான நட்சத்திர ஆமைக்கு சக்கரம் பொருத் தப்பட்டது.

இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 14 நட்சத்திர ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பூங்காவில் இயற்கையாக காடுகளில் உள்ள கீரிப் பிள்ளைகள், ஆமைகள் அடைப்பிடத்துக்குள் நுழைந்து, நட்சத்திர ஆமைகளின் கால்கள் மற்றும் இதர பகுதிகளை கடித்து சேதப்படுத்திவிட்டன.

இவ்வாறு காயமடைந்த ஆமைகள் கைப்பற்றப்பட்டு, பூங்கா விலங்கு மருத்து வமனைக்கு கொண்டுவரப்பட்டு, சிகிச்சை மூலம் குணப்படுத்தப் பட்டுள்ளன.

முன்னங்கால் ஊனம்

அதில் ஒரு பெண் நட்சத்திர ஆமைக்கு மட்டும் முன்னங்கால்கள் நடக்க முடியாத அளவுக்கு ஊனம் ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆமையால் நடமாடவும், இரையை தேடிச் செல்லவும் இயலவில்லை. இதனை சரி செய்வதற்காக பூங்கா கால்நடை மருத்துவர் குழு சார்பில், இரு முனைகளில் சக்கரங்கள் பொருத் தப்பட்ட கம்பி ஒன்று உறுத்தல் தராத ‘எப்பாக்சி’ கலவை கொண்டு, ஆமையின் அடிப்புற ஓட்டின் மீது ஒட்டப்பட்டது. தற்போது இந்த சக்கரங்கள் உதவியுடன் நட்சத்திர ஆமை வழக்கத்தை விட வேகமாக, தாம் விரும்பும் இடத்துக்கு வரவும், இரையை தேடிச் செல்லவும் முடிகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x