

பொதுமக்கள் சிரமமின்றி, விரை வாக ஆதார் அட்டை பெறுவதற் கேற்ப, சென்னையில் அரசு கேபிள் நிறுவனத்தின் நிரந்தர ஆதார் மையங்களில் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் சென்னையில் தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை, 15 மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், 18 தாலுகா அலு வலகங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 35 ஆதார் மையங் கள் செயல்படுகின்றன. தற்போது குடும்ப அட்டை, ஓய்வூதியம், வங்கிக் கணக்கு என அனைத் துக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளதால், ஆதார் மையங்களில் மக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பல மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், பணியாளர்கள் பொதுமக்கள் இடையே வாக்குவாதமும் ஏற்படு கிறது. இதனால் ஆதார் பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. மக் களின் சந்தேகங்களுக்கும் அங்கு முறையான விளக்கம் கிடைப்ப தில்லை. இதுதொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் புகார்கள் குவிந்தன.
இதைத் தொடர்ந்து, நிரந்தர ஆதார் மையங்களின் செயல்பாடு களை அரசு கேபிள் டிவி நிர்வாகம் கடந்த 13-ம் தேதி முதல் மாற்றியுள்ளது. இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பொதுமக்கள் வசதிக்காக நிரந்தர ஆதார் மையங்கள் இனி மேல் காலை 9.45 முதல் மாலை 5.45 வரை செயல்படும். அங்கு ஆதார் உதவி மேஜைகள் அமைக் கப்பட்டு, ஆதார் உதவி அலுவலர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளனர். அவர்கள் ஆதார் சேர்க் கைக்கு தேவையான இலவச படிவங்களை பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். மக்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் பரிசீலிப்பார்கள். ‘முதலில் வருவோருக்கு முதல் சேவை’ என்ற அடிப்படையில் வரிசை எண் பொறிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதற்கான பிரத்யேக இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் உள்ள வரிசை எண்ணுக்கேற்ப மக்கள் வரிசையில் நின்று சேவைகளைப் பெற உதவி அலுவலர்கள் வழிகாட்டுவார்கள். ஆதார் தொடர்பான சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளிப்பார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
ரிப்பன் மாளிகை வளாகத் தில் ஆதார் பதிவு பணியை மேற் கொண்டு வரும் பணியாளரிடம் இதுபற்றி கேட்டதற்கு, ‘‘ எல்லா வேலைகளையும் நான் மட்டுமே செய்யவேண்டி இருந்ததால். ஆதார் பதிவு தாமதமானது. தற்போது உதவி அலுவலர் நியமிக் கப்பட்டிருப்பதால், ஆதார் அட்டை வழங்குவது தொடர் பான பணியை மட்டுமே மேற்கொள்கிறேன். இதனால், அதிக நபர்களுக்கு பதிவு செய்ய முடிகிறது’’ என்றார்.
வேப்பேரியைச் சேர்ந்த சுகந்தி கூறும்போது, ‘‘முன்பு நீண்ட வரிசையில் காத்திருப்போம். அருகில் சென்றதும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை என்று கூறி திருப்பி அனுப்புவார்கள். தற்போது உதவி அலுவலர் நியமிக்கப்பட்டிருப்ப தால், வேலை உடனுக்குடன் முடிகிறது. நேரம் மிச்சமாகிறது’’ என்றார்.