Published : 31 Mar 2017 07:43 AM
Last Updated : 31 Mar 2017 07:43 AM

அறிவை விசாலப்படுத்த நூலகங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தல்

மாணவர்கள் தங்களின் அறிவை விசாலப்படுத்த நூலகங்களை பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார்.

மயிலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை எம்.சி.ராஜா இணைப்பு ஆண்கள் விடுதியில் வாசகர் வட்டம் மற்றும் நூலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

கல்வியின் சக்தி

இந்த விழாவில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு ஆகியோர் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தனர். பின்னர், விடுதி மாணவர்களிடையே பேசிய ஆர்.நடராஜ், “சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் சக்தி கல்விக்கு உண்டு. கல்வியை ஆர்வத்தோடு பயின்றால் முன்னேற முடியும். நம்மை தூக்கிவிட சிலர் கைகொடுப்பார்கள், அதனை சரியாக பிடித்துக்கொண்டு முன்னேற வேண்டும். இங்குள்ள மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயா ராகும் வகையில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசும்போது, “மாணவர்களின் அறிவை விசாலப்படுத்த உதவு பவை நூலகங்கள். மாணவர் களுடன் தொடர்ந்து உரையாட பலரின் கூட்டு முயற்சியால் இந்த புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நமக்கு யாராவது உதவி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. சுயமுயற்சியால் மாணவர் கள் முன்னேற வேண்டும். உலக முழுவதும் வேலை மற்றும் தொழில்ரீதியாக செல்ல ஆங்கிலம் அவசிமாகிறது. எனவே, இங்குள்ள மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்க திட்டமிட் டுள்ளோம். இதுதவிர, யோகா பயிற்சியும் அளிக்கப்படும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் க.வி.பரிமளா, அகரம் அறக் கட்டளையைச் சேர்ந்த த.செ.ஞான வேல், சமூக ஆர்வலர் கே.குமார், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த எஸ்.கே.சிவா, ஏ.எம்.இளங் கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x