குதூகலம் தர மறுக்கும் குற்றாலம்: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 2 ஆண்டுகளாகியும் தொடரும் துயரம்

குதூகலம் தர மறுக்கும் குற்றாலம்: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 2 ஆண்டுகளாகியும் தொடரும் துயரம்
Updated on
2 min read

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டரை ஆண்டுகளாகியும் குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், சீஸனை அனுபவிக்க இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு தொடர்கிறது.

குற்றாலத்தில் அடிப்படை வசதி களை ஏற்படுத்தக் கோரி வழக்கறி ஞர் கிருஷ்ணசாமி, உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 2014-ல் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், குற்றாலத்தில் ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் கொண்ட ஆணை யத்தை நியமித்தது. இதன்பேரில், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் டி.எஸ்.ஆர்.வெங்கடரமணா, அருண் என்ற அருணாசலம் ஆகி யோர் குற்றாலத்தில் ஆய்வு நடத்தி, குறைபாடுகளை பட்டியலிட்டு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, குற்றாலத்தில் எண்ணெய், ஷாம்பு, சோப், சீயக்காய், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தத் நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப் படை வசதிகள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து 28.11.2014-ல் நீதிபதிகள் உத்தர விட்டனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் இந்த நிபந்தனைகளை நிறைவேற்று வதில் சுணக்கம் நீடிப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடை மாற்றும் அறை

குற்றாலம் பிரதான அருவியில் பெண்களுக்கான இலவச உடை மாற்றும் அறைகள் பராமரிப்பின்றி உள்ளன. இதனால், கட்டணம் செலுத்தி உடைமாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. பலரும் திறந்தவெளியிலேயே உடை மாற்றும் அவலம் நிலவுகிறது. ஐந்தருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை பூட்டப்பட்டு உள்ளது. அதில் வியாபார பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையின் சாவி யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பழைய குற்றாலத்தில் உடை மாற்றும் அறைகள் பூட்டிக் கிடக் கின்றன. அவற்றில் கட்டணம் வசூ லிக்கும் உரிமம் ஏலம் விடப்படாத தால், பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்கும் பெண்கள் திறந்தவெளியில் உடை மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

குப்பைகள் தேக்கம்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலம் பிரதான அருவி நீர் செல்லும் ஓடையில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. ஓட்டல் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. அனைத்து அருவிகளிலும் பெண்கள் பாதுகாப்புக்கு பெண் போலீஸார் பணியில் இருப் பதில்லை. பிரதான அருவி பகுதியில் மட்டும் எப்போதாவது ஊர்க்காவல் படைப் பிரிவின் பெண்கள் பாது காப்புப் பணியில் போலீஸாருக்கு உதவி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

சாரல் பருவ காலத்தில் அதிக மான வாகனங்கள் வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்த போதுமானதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, திரும்ப எடுத்துச் செல்வதற்குள் கடும் அவதியை வாகன ஓட்டிகள் சந்திக்கின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு தேவை யான வசதிகள் செய்வது குறித்து, கடந்த மாதம் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரி களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், சீஸன் ஆரம் பித்து 15 நாட்கள் நெருங்கும் நிலையில் அவை நிறைவேற்றப்பட வில்லை. சுற்றுலா பயணிகளின் தேவைகளை உணர்ந்து, அடிப்படை வசதிகளை அதிகரித்தால் குற்றா லத்தில் சாரலை அனுபவிக்க வருப வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்ப்பாக உள்ளது.

பழைய குற்றாலத்தில் பெண்கள் உடை மாற்றும் அறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. | படங்கள்: மு.லெட்சுமி அருண்.

கண்டு கொள்ளப்படாத ஜெயலலிதா அறிவிப்புகள்

உயர் நீதிமன்ற கிளை நிபந் தனைகளை விதித்து உத்தர விட்ட சில நாட்களில், அப் போதைய தமிழக முதல்வர் ஜெயல லிதா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

பழைய குற்றாலம் மற்றும் பிரதான அருவிப் பகுதிக்கு இடையே சிற்றுந்துகள் இயக்கப் படும். குற்றாலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப் படும். அங்குள்ள அரசுக்குச் சொந்தமான பழைய குடில்கள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்படும்.

அனைத்து வசதிகளுடன் கூடிய துயில் கூடம், ஒருவர் மற்றும் இருவர் படுக்கும் அறை, கூடுதல் வசதிகளுடன் பெரிய அறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவை அமையும். மகளிர் கழிப் பறைகள், உடை மாற்றும் அறை கள் கூடுதலாகக் கட்டப்படும் ஆகியவை அவற்றில் சில. ஆனால், இவை அனைத்தும் அறிவிப்போடு நின்றுவிட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in