

ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டு மானத்தை முடித்து, மீனவ பய னாளிக்கு மானியத் தொகையை விரைவாக விடுவிக்க அதிகாரி களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மீனவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங் களை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
மீனவர்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை, மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீ்ன் பிடிப்பு குறைவு கால சிறப்பு நிவாரணத் தொகை ஆகியவற்றின்கீழ், நடப்பாண்டில் தகுதியான 5.5 லட்சம் மீனவர்களுக்கு மின்னணு பணப் பரிமாற்றம் மூலம், ரூ.125 கோடி இதுவரை வழங்கப்படுள்ளது. இந்த நிவாரணத்தொகை எதிர்காலங் களில் இன்னும் விரைவாக மீனவர் களை சென்றடைய வேண்டும்.
அண்மைக் கடல் பகுதியில் நிலவும் மீன்பிடி அழுத்தம் மற்றும் மீன்பிடி படகுகளின் எண்ணிக் கையை குறைக்கும் நோக்கில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சூரை மீன்பிடி தூண்டில், செவுள் வலை படகுகள் கட்டப்படுகின்றன. அதன்படி, ரூ.51 கோடியே 30 லட்சம் மானிய மதிப்பில் 171 சூரை மீன்பிடிப் படகுகள் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிகளை முடித்து, பயனாளிகளுக்கு உரிய மானியத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும். மீன்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் மீன்வளத்துறை செயலாளர் ச.விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.