

நாமக்கல் மாவட்டத்தில் லாரி, கோழிப்பண்ணை மற்றும் ரிக் போர்வெல் ஆகியவை பிரதான தொழில்களாக உள்ளன. இதில் அதிகளவு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக ரிக் தொழிலில் வெளிமாநில தொழிலா ளர்கள் அதிகளவு ஈடுபடுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதா கவும், கொத்தடிமைகள் போல் நடத்தப்படுவதாகவும் புகார் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள ரிக் நிறுவனத்தில் அதிகளவு வெளிமாநில தொழி லாளர்களை அடைத்து வைத் திருப்பதாக தகவல் வெளியானது. அதையடுத்து திருச்செங்கோடு கோட்டாட்சியர் த.செங்கோட்டை யன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பரமத்திவேலூர் பகுதி யில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முருகேசன் என்பவர் நடத்தி வந்த லட்சுமி போர்வெல்ஸ் நிறுவனத்தில் மகாராஷ்டிராவைச் சேரந்த 16 பேர், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 11 பேர், ஒடிஸாவைச் சேர்ந்த ஒரு தொழிலாளர், சட்டீஸ்கரைச் சேர்ந்த 9 பேர் என 37 தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதையடுத்து அவர்களை அதிகாரிகள் மீட்டு மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி முன் ஆஜர்படுத்தினர்.
விசாரணை நடத்திய ஆட்சியர், அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட போர்வெல் நிறுவன உரிமையாளர் முருகேசன் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஆலை ஒன்றில் இருந்து 51 பெண் கொத்தடிமைத் தொழிலாளர்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டது குறிப்பிடத்தக்கது.