

தென் மண்டல லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் சண்முகப்பா கூறியதாவது:
வாகனங்களுக்கு உயர்த்தப் பட்ட காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் இன்றுமுதல் (ஏப்ரல் 8) அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத் துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே இன்றுமுதல் நாடுதழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும்.