எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்
Updated on
1 min read

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. வரும் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 9 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் மாநில அரசுக்கான 122 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள் மற்றும் 18 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 1,020 பிடிஎஸ் இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in