தீபாவளியன்று ஒரு வீரருக்குகூட விடுமுறை கிடையாது: விபத்துகளை தடுக்க தயார் நிலையில் தீயணைப்பு துறை

தீபாவளியன்று ஒரு வீரருக்குகூட விடுமுறை கிடையாது: விபத்துகளை தடுக்க தயார் நிலையில் தீயணைப்பு துறை
Updated on
1 min read

தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. இந்நிலையில், பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்புத் துறையும் தயாராகிவிட்டது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை இல்லை. அதேநேரத்தில் பட்டாசு களால் தீ விபத்துகள் ஏற்படுவ தும் உண்டு. நாம் கவனமாக செயல்பட்டால் 95 சதவீத தீ விபத்து களை நிச்சயம் தவிர்த்து விடலாம். எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங் களை மேற்கொண்டாலும் ஒவ் வொரு ஆண்டும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.

கடந்த 2010-ல் தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தன்று 157 தீ விபத்துகள்தான் நிகழ்ந்தன. அது, 2011-ம் ஆண்டில் 665 ஆகவும், 2012-ல் 911 ஆகவும் அதிகரித்தது. கடந்த ஆண்டு 908 விபத்துகள் நடந்துள்ளன. மற்ற மாவட்டங்களைவிட சென்னை யில்தான் அதிக அளவில் தீ விபத்து நடக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்புத் துறை இணை இயக்குநர் விஜயசேகர் கூறியதாவது:

சென்னையில் 33 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு விபத்து ஏற்படும் பகுதிகள் என 54 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஒரு தீயணைப்பு வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து நீர் நிரப்பப்பட்ட 50 டேங்கர் லாரிகளும் தயார் நிலையில் வைக்கப்படும். வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 10 தீயணைப்பு வண்டிகளும், 200 வீரர்களும் கூடுதலாக வரவழைக்கப்பட உள்ளனர்.

விடுமுறை இல்லை

தீபாவளி தினத்தன்று தீயணைப்பு வீரர்கள் ஒருவருக்குகூட விடுமுறை கிடையாது. விடுமுறையில் இருப்பவர்களும் பணிக்கு திரும்பி வரவேண்டும். சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் உள்ள பகுதியில் 3 வண்டிகளும், ஜவுளி மற்றும் இனிப்பு கடைகள் உள்ள பகுதியில் 3 வண்டிகளும் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டிருக்கும். சென்னையில் 700 பேர் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் 302 நிலையங்களில் 6,801 வீரர்கள் தீயணைக்கும் பணிக்கு தயார் நிலையில் இருப்பர்.

தீ விபத்து ஏற்பட்டால் 101,102 என்ற எண்களுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு விஜயசேகர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in