ஒட்டன்சத்திரத்தில் 2 பேர் சிக்கினர்: சுவாதி கொலை வழக்கில் தொடர்பா?

ஒட்டன்சத்திரத்தில் 2 பேர் சிக்கினர்: சுவாதி கொலை வழக்கில் தொடர்பா?
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் 2 பேரை தனிப் படையினர் நேற்று பிடித்து விசார ணைக்கு அழைத்துச் சென்றனர். சென்னை பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீ ஸார் எட்டு தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், செல்போன் சிக்னல் மூலம் சந்தேகத்துக்கு உரி யவர்களை தேடி தனிப் படையினர் திண்டுக்கல் வந்தனர். நேற்று காலை திண்டுக்கல்லில் இருந்து பழநி செல்லும் வழியில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளில் (டி.என்.37 பதிவு எண் கொண்ட வாகனம்) ஹெல் மெட் அணிந்து சென்ற 2 பேரை சாதாரண உடையில் வந்த போலீ ஸார் பிடித்தனர்.

வாக்குவாதம்

இவர்களை வேனில் ஏற்ற முயன்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த அருகில் இருந்த பொதுமக்கள் கூட்டமாக வந்தபோது ‘நாங்கள் போலீஸார், கொலை வழக்கு சம்பந்தமாக இருவரையும் விசார ணைக்கு அழைத்துச் செல்கிறோம்’ என்று கூறவே பொதுமக்கள் விலகிச் சென்றனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் சென் னைக்கு அழைத்துச் சென்றனர்.

செல்போன் சிக்னல் மூலம் இருவரையும் தனிப் படையினர் நேற்று முன்தினம் முதலே பின் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் திண்டுக்கல் மாவட்ட போலீஸாருக்கு தெரி விக்கவில்லை.

இதனால் மாவட்ட போலீஸா ரும் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அலு வலம் முன்பு உள்ள வியாபாரிகள் உள்ளிட்டவர்களிடம் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரித்து தெரிந்துகொண்டனர். தனிப் படை போலீஸார் பிடித்துச் சென்றவர்களின் விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in