

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 103 நலிந்த தொழிலாளர் களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவியை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.
மே தினத்தை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும் அதிமுக (அம்மா) அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட 103 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழா வில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு நிதியுதவியை வழங்கினார்.
அண்ணா தொழிற்சங்க செய லாளர் சின்னசாமி தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில், அமைச்சர்கள் கே.ஏ.செங் கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.