

அத்திப்பட்டு புதுநகரில் வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டுள்ள சமையல் எரிவாயு டேங்கர் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் 5-வது நாளாக நேற்றும் நீடித்தது. லாரி உரி மையாளர்கள் மாற்று ஓட்டு நர்கள் மூலம் 50 சதவீத லாரி களை இயக்கினர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்ற டேங்கர் லாரி ஓட்டுநர் ஆந்திராவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும் பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புது நகரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறு வன சமையல் எரிவாயு டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கடந்த மாதம் 27- ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வருவாய்த் துறை யினர் மற்றும் போலீஸார் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்ட 36 ஓட்டுநர்கள் அன்று இரவே விடுவிக்கப்பட்டனர். எனினும், சில லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதான புகாரில் கைது செய்யப்பட்ட 6 ஓட்டு னர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலை யில், டேங்கர் லாரி உரிமை யாளர்கள் கடந்த 3 நாட்களாக மாற்று ஓட்டுநர்கள் மூலம் சமையல் லாரிகளை இயக்கி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தமிழ் நாடு பெட்ரோலியம் காஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில துணைத் தலைவர் எஸ்.செல்வ ராஜ், “ஓட்டுநர்களின் கோரிக்கை தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச முன்வரவில்லை. இத னால் போராட்டம் நீடிக்கிறது. அதேநேரம், விதிமுறைகளை மீறி மாற்று ஓட்டுநர்கள் மூலம் 50 சதவீத லாரிகளை இயக்கி வருகின்றனர்” என்றார். போலீஸ் வட்டாரமோ, “லாரி ஓட்டுநர்களின் போராட்டம் முடி வுக்கு வந்து விட்டது. ஓட்டு நர்கள் வழக்கம்போல் நேற்று லாரிகளை இயக்கத் தொடங்கி விட்டனர். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள் ளிட்ட மாவட்டங்களில் சமை யல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை” என்று விளக்கமளித்துள்ளது.