தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு: பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு

தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு: பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு
Updated on
1 min read

மறு தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கடந்த 16-ம் தேதி கூடியது. அன்று, நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அலுவல் ஆய்வுக் குழு முடிவின்படி கடந்த 20-ம் தேதி திங்கள் கிழமை முதல் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. 4-ம் நாளான 23-ம் தேதி, பேரவைத் தலைவரை நீக்க கோரும் தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. இதன் பேரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பேரவைத் தலைவர் பி.தனபால் வெற்றி பெற்றார். கடைசி நாளான நேற்று பேரவையில், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பட்ஜெட் தொடர்பாக பேசினர். அதன்பின், நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார். தொடர்ந்து அரசின் சட்ட முன்வடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பது குறித்த தீர்மானத்தை பேரவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் கொண்டுவந்தார். அந்த தீர்மானமும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘‘பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. பேரவை கூடும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in