

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய வீரியமிக்க, கட்டுக்கோப்பான போராட்டத்தால் தமிழகம் புதிய கவுரவம் பெற்று தரணியில் தலைநிமிர்ந்துள்ளது. கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரையில் குடும்பம் குடும்பமாய் திரண்டு வந்து சாலைகளில் உரிமை முழக்கமிட்டவர்களின் எழுச்சிகரமான போராட்டக் காட்சிகளின் சிறப்புப் படத் தொகுப்பு.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கோவை வ.உ.சி. பூங்காவில் நேற்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள். படம்: ஜெ.மனோகரன் |
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி 3-வது நாளாக நேற்று வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள். படம்: விஎம்.மணிநாதன் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாளையங்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திரளாகப் பங்கேற்ற மாணவிகள். படம்: மு.லெட்சுமி அருண் |