கர்நாடகம் அணைகட்டுவதை தடுக்க பிரதமரிடம் முறையிட வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கர்நாடகம் அணைகட்டுவதை தடுக்க பிரதமரிடம் முறையிட வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை
Updated on
1 min read

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க, அனைத்துக் கட்சி, விவசாய சங்கப் பிரதிநிதிகளை பிரதமரிடம் அழைத்துச் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறையிட வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியபோது, “ஷேல் காஸ் திட்ட பாதிப்பு குறித்து என்னால் தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, ஷேல் காஸ் எடுக்கும் திட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவின் ஆய்வறிக்கையை பெற்று அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை தமிழக அரசு முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டமும் இணைத் திட்டமாக இருப்பதால், இத்திட்டம் குறித்த பாதிப்பை அக்குழு ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in