

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றபோதும், மரணமடைந்த பிறகும் அதிர்ச்சியில் பலர் இறந்தனர். அவர்களில் 166 பேர் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சத்தை கடந்த ஜனவரி 9-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக மேலும் 429 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவல கத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சி யில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமை நிர்வாகி கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவியை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வழங்கினார். மேலும் கட்சி, தேர்தல் பணிகளின்போது உயிரிழந்த 13 பேர் குடும்பங் களுக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு தினகரன் அளித்த பேட்டி:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதே, அதிமுக வேட்பாளர் யார்?
ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரை கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூடி முடிவெடுக்கும். இந்த இடைத்தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
ஓபிஎஸ் அணியினரும் வேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளதே?
ஓபிஎஸ் அணி என்று ஒன் றில்லை. தேர்தலை பொறுத்தவரை எங்களுக்கு எதிரி திமுக மட்டுமே.
ஜெயலலிதா மரணம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ள நிலையில், ஆர்.கே.நகர் மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்களா?
பொய்ப் பிரச்சாரம், பொய் குற்றச்சாட்டை ஏழரை கோடி மக் கள் நம்ப மாட்டார்கள். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி நடத்தினார். தற் போது அவரது பாதையில் இன்னும் சிறப்பாக ஆட்சி நடந்து வரு கிறது. பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
ஓபிஎஸ் உண்ணாவிரதம் நடத்தி யுள்ளாரே?
நீங்கள்தான் அவரைப் பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரை அவர் ஓபிஎஸ் அல்ல; ஜீரோ பிஎஸ்தான்.
தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா வின் பதில் அனுப்பப்பட்டுவிட்டதா?
பதில் தயாரித்து வருகிறோம். 10-ம் தேதிக்குள் (இன்று) அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.