‘கருணாநிதி மீது மரியாதை உண்டு’

‘கருணாநிதி மீது மரியாதை உண்டு’
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் எங்கள் ஊர்க்காரர் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஜவுளி, கதர் துறைகள் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில், திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, ஜவுளி கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, லாபத் தொகையையும் தெரிவித்தார். அப்போது, ‘கலைஞர் கருணாநிதி கூட்டுறவு சங்கம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மட்டும் லாபம் ஈட்டியுள்ளது’ என்றார்.

உடனடியாக திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி எழுந்து, ‘‘எங்கள் தலைவர் பெயரை மட்டும் குறிப்பிட்டு கூறுவது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘திமுக தலைவர் கருணாநிதி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால்தான் அவர் பெயரைக் குறிப்பிட்டேன். திமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மீது மரியாதை உண்டு. ஏனென்றால் அவர் எங்கள் ஊர்க்காரர்’’ என்றார்.

அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குறுக்கிட்டு, ‘‘பதிவு செய்யப்பட்டுள்ளதால் எங்கள் தலைவர் பெயரை கூறியதாக அமைச்சர் தெரிவிக்கிறார். உங்கள் முன்னாள் முதல்வர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளதுதானே?’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in