

லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியிருப்பதால் இரண்டு நாட்கள் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ''லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியிருப்பதால் இரண்டு நாட்கள் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.
கடலூர் மற்றும் புதுச்சேரியில் சற்று அதிக மழை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் தூறல் விழும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். வரும் 5-ம் தேதி கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்துள்ளது.