

கடந்த 6 ஆண்டுகளாக பல நெருக்கடிகளை எதிர்கொள்ளக் காரணமாக இருந்த ஏர்செல் - மேக் சிஸ் வழக்குகளில் விடுவிக்கப்பட் டிருப்பது மாறன் சகோதரர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித் துள்ளது. இதன்மூலம், அரசியலில் இழந்த செல்வாக்கை அவர்கள் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி யால் ‘எனது மனசாட்சி’ என அழைக் கப்பட்டவர் முரசொலி மாறன். தலைநகர் டெல்லியில் திமுகவின் முகமாக விளங்கிய அவர், வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்ச ராக இருந்தார். முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு அவரது இளைய மகன் தயாநிதி மாறன் அரசியலில் இறங்கினார். 2004 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரானார். அண்ணன் கலாநிதி மாறன் சன் குழுமத்தின் தலைவராக வெற்றிகரமான தொழிலதிபராக வலம்வர, தம்பி தயாநிதி மாறன், மத்திய அமைச்சராக டெல்லியில் கொடிகட்டிப் பறந்தார். திமுகவிலும் இவர்களது செல்வாக்கு பரந்து விரியத் தொடங்கியது.
அழகிரியுடன் விரிசல்
இந்நிலையில், ‘திமுகவில் யாருக்கு செல்வாக்கு’ என்பது தொடர்பாக வெளியான கருத்துக் கணிப்பால் மு.க.அழகிரி - மாறன் சகோதரர்கள் இடையே விரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து 2007-ல் தயாநிதி மாறன் விலகினார்.
2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் மத்திய அமைச்சரானார் தயாநிதி மாறன். 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர் பாக தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியதால் 2011-ல் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
சரிந்த செல்வாக்கு
இதற்கிடையில், தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது சென்னை தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்த தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐயிடம் சிவசங்கரன் கடந்த 2011-ல் புகார் செய்தார். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கு, மாறன் சகோதர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. சிபிஐ மட்டுமல்லாது அமலாக்கத் துறையும் விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு களால் திமுகவிலும், அரசியலிலும் மாறன் சகோதரர்களின் செல் வாக்கு குறையத் தொடங் கியது.
சிபிஐ வழக்குகளால் மாறன் சகோதர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கடந்த 2011-ல் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘அந்த வழக்குகளை அவர்களே பார்த்துக் கொள்வார் கள்’’ என ஒரே வரியில் முடித்துக் கொண்டார். இதனால், மாறன் சகோதரர்களை கருணாநிதி கைவிட்டுவிட்டதாகவும் விமர்சனங் கள் எழுந்தன. சில நாட்களிலேயே, ‘‘கலாநிதி, தயாநிதி மாறனுக்கு திமுக துணை நிற்கும்’’ என கருணாநிதி அறிவித்தார்.
இந்த சூழலில், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குகளை மாறன் சகோதரர்கள் நடத்தி வந்தனர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறன் தோல்வி அடைந்தார். அதன்பிறகு அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
தயாராகும் சகோதரர்கள்
இந்நிலையில், ஏர்செல் - மேக் சிஸ் வழக்குகளில் இருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட அனைவரையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுவித்தது. இந்த வழக்குகளால் கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட மாறன் சகோதரர்களுக்கு இத் தீர்ப்பு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இதன்மூலம், அரசி யலில் இழந்த செல்வாக்கை அவர் கள் மீட்டுள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் சட்டரீதியாக எதிர்கொள்ள மாறன் சகோதரர்கள் தயாராகி வருவ தாகக் கூறப்படுகிறது.