

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆறுகோட்டுத்துரை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
ஆறுகோட்டுத்துரையைச் சேர்ந்த மணிவண்ணன், மஹாதேவன், செல்வராஜ், வெற்றிவேல் ஆகிய 4 மீனவர்களும் ஃபைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இன்று அதிகாலை கோடியக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி 4 பேரையும் சிறை பிடித்துச் சென்றனர்.
பிப்ரவரி 1-அம் தேதி தமிழக மீனவர்கள் 19 பேரும், பிப்ரவரி 3.ல் 20 பேரும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை கண்டித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.