

மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு வந்தால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு பறிபோகும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறினார்.
பெண் கல்விக்காக போராடிய முதல் இந்திய ஆசி ரியை சாவித்ரிபாய் புலேவின் நேற்று 186-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, பொது பள்ளிக்கான மாநில மேடை சார்பில், ‘கல்வியில் வகுப்புவாதம் வணிகமயம் எதிர்ப்பு நாள்’ என்ற கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை தொடங்கிவைத்து, முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசியதாவது:
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான பொது தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (‘நீட்’), கடந்த ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. சிபிஎஸ்இ கேள்விமுறையும், ‘நீட்’ தேர்வுமுறையும் ஒரேமாதிரி யானவை. எனவே, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நீட் தேர்வு எளிதாக இருக்கும். மனப்பாடம் சார்ந்த மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை அதற்கு தயார்படுத்த பயிற்சி அவசியம்.
‘நீட்’ தேர்வு வந்தால் தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வெளிமாநில சிபிஎஸ்இ மாணவர்கள் சேர்ந்து விடுவார்கள். ஏழை மாணவர் களுக்கு அரசு மருத்துவக் கல் லூரிகளில் படிக்கும் வாய்ப்பு பறிபோகும். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தில், தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டது. இந்த விதிவிலக்கை தற்போது புதிதாக கொண்டுவரப் பட்டுள்ள சட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி பரந்தாமன் கூறினார்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் பேசும் போது, ‘‘கல்வி என்பது ஏழைகள், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறிவருகிறது. பல்வேறு தேசிய இனங்கள், கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி இருக்க முடியாது. அது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியில் மத்திய அரசு அநாவசியமாக ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறும் போது, ‘‘புதிய கல்விக் கொள்கைக் குப் பின்னால் காவிமயம் என்ற கோட்பாடு இருக்கிறது. கல்வியை காவிமயமாக்குவதை முறியடிக்க அனைவரும் இணைந்து போராட வேண்டும்’’ என்றார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எஸ்டிபிஐ கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி, ‘நாம்’ அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத் தலைவர் ரெக்ஸ் சற்குணம், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மக்களுக்கான மருத்துவர்கள் அரங்க பொதுச் செயலாளர் எஸ்.காசி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், தமிழ் நாடு மாணவர் - பெற்றோர் நலச் சங்க தலைவர் எஸ்.அருமைநாதன், ‘புதிய குரல்’ ஆசிரியர் ஓவியா ஆகியோரும் பேசினர்.
முன்னதாக, கல்வி உரிமைக் கான அகில இந்திய கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஐ.பி.கனகசுந்தரம், சாவித்ரிபாய் புலே வின் படத்தை திறந்துவைத்துப் பேசினார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, கருத் தரங்கு தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.
மார்க்சிய பெரியாரிய பொது வுடைமை கட்சி பொதுச் செய லாளர் வே.ஆனைமுத்து, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத் தொடர்பாளர் எஸ்.எம்.இதய துல்லா உள்ளிட்ட கல்வியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.