

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் கொறடா அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 'திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 23) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும். திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இதே நாளில் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.