

ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் 3 லட்சத்து 50 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனு சாமி தெரிவித்தார்.
அதிமுக கட்சி, சின்னத்தை கைப்பற்றுவதற்காக முதல்வர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர். தொண்டர்கள் ஆத ரவு யாருக்கு உள்ளது என்பதை நிரூபிக்க கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணிகளுக் கும் தேர்தல் ஆணையம் உத்தர விட்டது.
இதன்படி, நேற்று முன்தினம் வரை முதல்வர் பழனிசாமி அணியி னர் 3 லட்சத்து 98 ஆயிரம், ஓபிஎஸ் அணி சார்பில் 1 லட்சத்து 68 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை ஓபிஎஸ் அணியின் கே.பிமுனுசாமி, மைத்ரேயன் எம்பி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் கூடுதலாக 1 லட்சத்து 70 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
இது தொடர்பாக நிருபர்களிடம் கே.பி.முனுசாமி கூறும்போது, ‘‘ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. இந்த பிரமாண பத்தி ரங்களில் 93 லட்சம் கட்சித் தொண் டர்கள் இணைந்துள்ளனர். மேலும், 50 லட்சம் உறுப்பினர்களின் பிர மாண பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.
தீபா தரப்பில் 52,000 மனு
அதிமுகவுக்கு உரிமை கோரி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை யினர் தேர்தல் ஆணையத்தில் நேற்று பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்களுக்கு ஆதர வான கட்சி நிர்வாகிகளின் பிர மாணப் பத்திரங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையும் அதிமுகவுக்கு உரிமை கோரி களமிறங்கியுள்ளது. இதற்காக பேரவையின் தலைமை செய்தித் தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் தலைமையில், பேரவை நிர்வாகிகள் நேற்றுமுன் தினம் டெல்லி புறப்பட்டு சென்ற னர்.
அவர்கள், நேற்று காலை டெல்லி யில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து 52,000 பிரமாணப் பத்திரங்களை அளித்த னர். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். தங் கள் அணியை அதிமுகவாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
பிரதமரை சந்திக்க முயற்சி
இதுதவிர, கூடுதல் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதோடு பிரதமரை சந்திக்க எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபாவுக்கு நேரம் ஒதுக்கும்படி பிரதமர் அலுவலகத்திலும் பேரவை நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பில் மேலும் 50 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.