

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தமிழகத் தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும்கூட மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனையின் மூலம் தவறு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், மக்களால் கொண்டுவரப்பட்ட அதிமுக ஆட்சியை கலைத்துவிடலாம் என்ற திட்டம் தவறானது. எனவே, பதவிக் காலம் இருக்கும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றார்.