சென்னை மாநகராட்சியின் புதிய பகுதிகளில் 1236 சாலைகள்

சென்னை மாநகராட்சியின் புதிய பகுதிகளில் 1236 சாலைகள்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், ரூ.400 கோடி செலவில், 1236 ஒருங்கிணைந்த சாலைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, தமிழக அரசு சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டங்களை கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. விரிவாக்கப்பட்ட மண்டல பகுதிகளில், 2013-14-ம் ஆண்டிற்கான மூன்றாவது சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டத்தின்படி, ரூ.400 கோடியில், மழைநீர் வடிகால்வாய்கள், தெரு விளக்குகள், நடைபாதைகள் ஆகியவை அடங்கிய, 1236 ஒருங்கிணைந்த சாலைகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

மூன்றாவது பெருநகர் வளர்ச்சி திட்டத்தின்படி, ரூ. 400 கோடியில், 250 கி.மீட்டர் கொண்ட, 1236 ஒருங்கிணைந்த சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அம்பத்தூர் மண்டல பகுதியில் மட்டும் அதிகபட்சமாக, ரூ.146 கோடியில், 512 சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

மற்ற விரிவாக்கப்பட்ட மண்டல பகுதிகளான, பெருங்குடியில் 217, மணலியில் 127, ஆலந்தூரில் 94, திருவொற்றியூரில் 91, மாதவரத்தில் 85, வளசரவாக்கத்தில் 60 என, ஒருங்கிணைந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

விரைவில் தொழில் நுட்ப அனுமதி பெற உள்ளோம். அதன் பிறகு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in