Published : 21 Jul 2016 08:52 am

Updated : 14 Jun 2017 15:05 pm

 

Published : 21 Jul 2016 08:52 AM
Last Updated : 14 Jun 2017 03:05 PM

காரைக்கால் மாணவர் விடுதியில் மது பாட்டில்கள்: ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அதிர்ச்சி

காரைக்காலில் உள்ள ஆதி திராவிடர் நலத் துறை மாணவர் விடுதியில் மது பாட்டில்கள் வைத் திருந்தது அமைச்சரின் ஆய்வில் தெரியவந்தது.

காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள அரசு ஆதி திராவிட மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், உரிய நேரத்தில் உணவு கிடைப்பதில்லை எனவும் அங்கு தங்கியுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, புதுச்சேரி மாநில சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, அங்கு விடுதிக் காப்பாளர் இல்லை. மாணவர் களிடம் குறைகளைக் கேட்ட றிந்த அமைச்சர், அவர்கள் தங்கி யுள்ள அறைகளைப் பார்வை யிட்டார். அப்போது, ஒரு அறையின் அலமாரியில் மது பாட்டில்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், அதுகுறித்து மாணவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, விடுதிக் காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர், அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாணவர்களின் விடுதியில் மது பாட்டில்கள் இருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் 2 வார காலத்துக்குள் செய்து தரப் படும். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் வகையில், ஓர் ஆசிரியரை விடுதியில் காப்பாள ராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


காரைக்கால் மாணவர் விடுதிமது பாட்டில்கள்அமைத்தி அதிர்ச்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x