

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீஸாருக்கு ஆண்டுதோறும் போனஸ் தொகை வழங்கப்படும். இந்த பணத்தை ஒரு வாரத் துக்கு முன்னரே தமிழக அரசு வழங்கும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி வர உள்ளது.
ஆனால், தமிழக அரசு போனஸ் குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இது போலீஸாருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் போனஸ் தொகையை அரசு எப்போது அறிவிக்கும் என காத் திருப்பதாக போலீஸார் தெரி வித்துள்ளனர்.