பாண்டிபஜாரில் நடந்து செல்வோருக்கு உகந்த வசதி: 2-வது முறையாக போக்குவரத்தை முறைப்படுத்தி ஒத்திகை

பாண்டிபஜாரில் நடந்து செல்வோருக்கு உகந்த வசதி: 2-வது முறையாக போக்குவரத்தை முறைப்படுத்தி ஒத்திகை
Updated on
2 min read

சென்னை தியாகராயநகரில் உள்ள பாண்டிபஜாரில் நடந்து செல்வோருக்கு உகந்த வசதியை ஏற்படுத்துவதற்காக, நேற்று 2-வது முறையாக போக்குவரத்தை முறைப்படுத்தி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

பாண்டிபஜாரில் பல்வேறு பிரபல வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொருட்கள் வாங்க தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், அந்த சாலையில் வாகனங்களும் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சாலையில் பொதுமக்கள் எந்தவித போக்குவரத்து இடையூறும் இன்றி, நடந்து சென்று பொருட்களை வாங்க, மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து மற்றும் நடந்து சென்று பொருட்களை வாங்கு வதை ஊக்குவிக்க, அங்கு நடைபாதைகளை மேம்படுத்தி, நடைபாதை வளாகம் ஏற்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியது. அப்பணி, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதை சோதனை முறையில் செயல்படுத்தி, அதில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பின்னர் முழுமையாக செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதற்காக கடந்த நவம்பர், மாதம் சோதனை அடிப்படையில் பாண்டி பஜாரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று, 2-வது முறை யாக சோதனை அடிப் படையில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி பாண்டிபஜாரில் இரு சாலைகளிலும் நடுவே தடுப்பு ஏற் படுத்தி பாதி சாலையில் பேருந்து மற்றும் இரு சக்கர வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட் டது. மீதம் உள்ள சாலையில் பொது மக்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டது. அதில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பறை இசை, டிரம்ஸ் இசை, நடன நிகழ்ச்சிகள், மருத்துவ பரிசோதனை, பாரம்பரிய சத்துணவு கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பொருட்களை வாங்க வந்தவர்களுக்கு மாற்று இடத்தில் வாகன நிறுத்த வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி கொடுத்திருந்தது. வாகன நிறுத்திமிடத்திலிருந்து முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கடைகளுக்கு செல்ல ஏதுவாக, பேட்டரி கார்களும் நிறுத்தப் பட்டிருந்தன. இதை, மாநக ராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், பேட்டரி வாகனத்தில் சென்று பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி துணை ஆணையர்கள் கோவிந்த ராவ், சுபோத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காற்று மாசு குறைந்தது

பாண்டிபஜாரில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, வாகன புகையில் உள்ள நைட்ரஜன் டை ஆக்ஸைடு, 1 கனமீட்டர் கொள்ளளவில் 83.20 மைக்ரோ கிராம் இருந்தது. காற்றில் கலந்துள்ள நுண்துகள்கள் 80 மைக்ரோ கிராமாக இருந்தது. நேற்று ஒத்திகையின்போது, பேருந்து, இருசக்கர வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் பாண்டிபஜார் சாலையில் அனுமதிக்கப்படாததால், நைட்ரஜன் டை ஆக்ஸைடு 29.50 மைக்கோ கிராமாகவும், காற்றில் கலந்துள்ள நுண் துகள்கள் 61 மைக்ரோ கிராமாகவும் குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்திட்டம் செயல்படும் தருணத்தில் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் காற்று மாசுத்தன்மை வெகுவாக குறையும்.

ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1366 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளநிலையில், அந்த நிதியிலிருந்து ரூ.55 கோடி செலவில் நடைபாதை வளாக திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in