ஆம்னி பஸ்களில் பட்டாசுகளை ஏற்றிச் சென்றால் பர்மிட் ரத்து: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை

ஆம்னி பஸ்களில் பட்டாசுகளை ஏற்றிச் சென்றால் பர்மிட் ரத்து: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
Updated on
1 min read

ஆம்னி பஸ்களில் பட்டாசுகளை ஏற்றிச் சென்றால், சம்பந்தப்பட்ட பஸ்களின் உரிமம் ரத்து செய்யப் படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருவதை யொட்டி, ஏராளமான மக்கள் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், இனிப்பு வகைகள் வாங்கிச் செல்ல தி.நகர், புரசை வாக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளிக்காக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல், அரசு பஸ்களிலும் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 9,088 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு நேற்றுமுன்தினம் அறிவித் துள்ளது. இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.

இதில், பட்டாசுகளை ஏற்றிச் செல்லக் கூடாது என ஏற்கெனவே அரசு தடைவிதித்துள்ளது. இதையும் மீறி, ஆம்னி பஸ்களில் வியாபாரிகள், பொதுமக்கள் பட்டாசுகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட பஸ்களின் உரிமம் ரத்து அல்லது சஸ்பெண்ட் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத் துத் துறை ஆணையரக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆம்னி பஸ்களில் ஆய்வு செய்யும் போது, பட்டாசு இருப்பது உறுதி செய்யப் பட்டால், சம்பந்தப்பட்ட பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்றார்.

போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை கேட்டபோது,‘‘ தீபாவளி பண்டிகை மட்டுமல்ல, எப்போதுமே அரசு பஸ்களில் வெடி மருந்து தொடர்புடையவை எவற்றையும் ஏற்ற அனுமதிப்பதில்லை. இருப்பினும் வரும் தீபாவளியை யொட்டி பயணிகள் விதிகளை அறியாமலும் பட்டாசுகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும், பயணிகளின் பார்சல் குறித்து முழுமையாக கேட்க வேண்டுமென நடந்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் மீறி பட்டாசு கொண்டு செல்லும் பயணிகள் பிடிப்பட்டால், போலீஸா ரிடம் ஒப்படைக்கப்படு வார்கள்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in