

விவசாயிகளின் கோரிக்கை களுக்கு ஆதரவாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.
விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக கோயம்பேடு காய்கறி சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அடைக்கப்பட்டன.
கனி, மலர் சந்தையில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் அவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பெருமளவுக்கு வரவில்லை. இதனால் கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
இது தொடர்பாக கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நலச் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:
தமிழக விவசாயிகள் வறட்சி யால் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்து தொழில் செய்கிறோம். அவர் களுடைய பாதிப்பு எங்களையும் பாதிக்கும். அதனால் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
15 ஆயிரம் தொழிலாளர்கள்
இந்த கடைகளை சார்ந்து சுமார் 15 ஆயிரம் தொழிலாளர் கள் வேலை செய்கின்றனர். காய்கறி சந்தைக்கு காய்கறி ஏற்றி வரும் சரக்கு லாரிகள் வரவில்லை. இதனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் விவ சாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண் டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களை தூர்வார வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.