என் கணவரின் கதையை படமாக எடுக்கப் போகிறேன்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தகவல்

என் கணவரின் கதையை படமாக எடுக்கப் போகிறேன்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தகவல்
Updated on
1 min read

சந்தன வீரப்பனின் வாழ்க்கை வர லாற்றை திரைப்படமாக எடுக்கப் போவதாக அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரது மகள் வித்யாராணியுடன் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சமீபத்தில் வெளியாகியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் உண் மைக்கு புறம்பானவை. எனது கணவர் சந்தன மரம் கடத்தினார் என்பது பரவலான கருத்து. கடத் தியது என் கணவர் என்றால், அதை வாங்கியவர்களைப் பற்றி படங் களில் ஏன் வருவதில்லை? எனது கணவர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். எந்த காவல்துறை அதி காரிக்கும் அவர் எப்படி வாழ்ந்தார் என்பது தெரியாது. எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மட்டும்தான் அது தெரியும்.

இந்தப் படம் தெலுங்கில் வந்த போது பார்த்தோம். இதில் என் கணவரைப் பற்றிய காட்சிகளை பார்க்கும்போது வேதனையாக இருந்தது. தமிழில் இந்தப் படம் வரும் என்று எனக்கு தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் நான் முன்பே நடவடிக்கை எடுத் திருப்பேன்.

என் கணவர் விஷயத்தில் காவல் துறை கூறுவதை மிகைப் படுத்தி திரைப்படத்தில் காட்டு கிறார்கள். மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம். இந்தப் படத்தை புறக்கணியுங்கள். மிக விரைவில் என் கணவரின் உண்மைக் கதையை நானே திரைப்படமாக எடுக்கவுள்ளேன். அதற்கான பணி களில் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன். இதுகுறித்த அறி விப்பை விரைவில் வெளியிடு வேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in