Published : 01 Jun 2017 11:42 am

Updated : 01 Jun 2017 11:42 am

 

Published : 01 Jun 2017 11:42 AM
Last Updated : 01 Jun 2017 11:42 AM

பாபநாசம் அணை நீர்மட்டம் கவலைக்கிடம்: 17 அடியானதால் குடிநீருக்கும் சிக்கல் ஏற்படும் அபாயம்

17

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலையில் 17 அடியாக இருந்தது. பருவமழை பெய்யாமல் வறட்சி நீடித்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீருக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

பருவ மழை ஏமாற்றியதன் காரணமாக பாபநாசம், மணி முத்தாறு அணைகள் நீர்மட்டம் வேக மாக குறைந்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் குடிநீர், விவசாய பணி களுக்கு இந்த அணைகளே ஆதா ரமாக உள்ளன. இந்த அணைகளின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மட்டுமல்லாது, விருதுநகர் மாவட்டத்துக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். தென்மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யும். இதன் மூலம் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும்.

2016-ல் ஏமாற்றம்

கடந்த 2015-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இரண்டு அணைகளும் நிரம்பின. ஆனால், கடந்த ஆண்டு தொடங்கி தற்போதுவரை வறட்சி காரணமாக அணைகளில் நீர் பெருகவில்லை. பாபநாசம், மணி முத்தாறு அணைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வறண்டன. மணி முத்தாறு அணையின் கையிருப்பு நீரை வைத்தே குடிநீர் தேவையை பூர்த்தி செய்து சமாளித்தனர். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை ஏமாற்றியதால், அணையின் நீர்மட்டம் 20 அடி வரை மட்டுமே உயர்ந்திருந்தது.

17 அடி மட்டுமே

இவ்வாண்டு தொடக்கத்திலும் பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாகவே இருந்தது. அவ்வப் போது பெய்த மழையால் கடந்த மார்ச் மாதத்தில் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியிருந்தது. ஆனால், அதிலிருந்து தொடர்ச்சியாக மழை பொய்த்துப்போனதால் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து நேற்று காலையில் 17 அடியாகிவிட்டது. இந்த 17 அடியிலும் 10 அடிக்குமேல் சகதிதான் காணப்படும். எனவே, தண்ணீர் இருப்பு கவலைப்படும் வகையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

குடிநீர் கேள்விக்குறி

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 177.61 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 194.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டதால் . அணையின் தற்போதைய நீர் இருப்பை வைத்து குடிநீர் தேவையை எத்தனை நாட்களுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்று தெரியாமல் அதிகாரிகள் திகைத்துள்ளனர்.

தற்போது அணையினுள் பள்ள மான இடங்களில் குட்டைபோல் தண்ணீர் காணப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கெனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் தாமிரபரணி ஆற்று நீரை தொழிற்சாலைகள் எடுக்க மாவட்ட நிர்வாகங்கள் தடைவிதித்திருக் கின்றன. இரு மாவட்டங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போதைய அணை நீர் இருப்பு குடிநீருக்கும் சிக்கலை உருவாக்கும் நிலையுள்ளது.

மணிமுத்தாறு

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 33.39 அடியாக நேற்று இருந்தது. அணைக்கு வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந் தது.

104 டிகிரி வெயில்

அக்னி நட்சத்திரத்துக்குப் பின் நேற்றுமுன்தினம் வெயிலின் தாக்கம் திருநெல்வேலியில் குறைந்திருந்த நிலையில், நேற்று கோடையைப்போல் வெயில் சுட்டெரித்தது. நேற்று பகல் நேர வெப்பநிலை 104 டிகிரி பாரன்கீட்டாக பதிவாகியிருந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் குண்டாறு அணைப்பகுதியில் மட்டும் 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

குற்றாலத்தில் பிரதான அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் ஓரளவுக்கு தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் 2 பிரிவுகளில் மட்டும் குறைவாக தண்ணீர் விழுந்தது.



பாபநாசம் அணைஅணை நீர்மட்டம்தண்ணீர் வறட்சிகுடிநீர் பற்றாக்குறைமணி முத்தாறு அணைநீர்மட்டம் குறைவு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x