நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணி: தென் சென்னையில் விநியோகம் பாதிக்கும்

நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணி: தென் சென்னையில் விநியோகம் பாதிக்கும்
Updated on
1 min read

நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பரா மரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுவதால், தென் சென்னை பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் பாதிக்கும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் இயங்கி வருகிறது. இதில் சில முக்கிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி, தென் சென்னை பகுதிகளான திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச் சேரி, பெசன்ட்நகர், சோழிங்க நல்லூர், கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 முதல் இரவு 9 மணி வரை குடிநீர் விநி யோகத்தில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் பொதுமக்கள் முன் னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத் துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும், அவசர தேவைக்கு, லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள 8144930245, 8144930267 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in