

ரேகை பதியாமல் கொலையாளி விட்டுச் சென்ற அரிவாள், தெளிவில் லாத கண்காணிப்பு கேமரா காட்சி கள். இந்த இரண்டுதான் சுவாதி கொலை வழக்கில் போலீஸுக்கு கிடைத்த துப்புகள். இதை வைத்துக்கொண்டே, துல்லியமாக கொலையாளியை கைது செய்துள்ளனர் தமிழக போலீஸார்.
கொலையாளியைப் பிடிக்க தலா 10 போலீஸார் அடங்கிய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 110 போலீஸாரும் இரவு, பகலாக தேடுதல் வேட்டை நடத்தி, 8 நாட்களில் கொலையாளியைப் பிடித்திருப்பது, பொதுமக்களிடம் அவர்களுக்கு மிகுந்த பாராட்டு களையும் நற்பெயரையும் பெற்றுத் தந்துள்ளது.