உலகம் முழுவதும் யோகா கலை பரவுகிறது: கோவை ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் மோடி பேச்சு

உலகம் முழுவதும் யோகா கலை பரவுகிறது: கோவை ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் மோடி பேச்சு
Updated on
2 min read

உலகம் முழுவதும் யோகா கலை பரவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் மகாதேவர் ஒருவர் தான். எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் மகா ம்ருத்யுஞ்சய மந்திரம்தான் சிவனுக்கு உகந்தது. எத்தனையோ விழாக்கள் இருந் தாலும் மகா என்ற எழுத்துடன் தொடங்குவது மகா சிவராத் திரிதான். இருளைப் போக்கி வெளிச் சத்தைக் கொண்டு வருவதுபோல, அநீதியை ஒழிப்பதை உணர்த்து கிறது மகா சிவராத்திரி.

பல நூறாண்டுகளாக ஞானிகள் வாழ்ந்துள்ளனர். வெவ்வேறு இடங் களில் இருந்து ஞானிகள் வந்துள் ளனர். அவர்களது மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் தெய்வீக நோக்கம் ஒன்றுதான். இங்கு 112 அடி உயர ஆதியோகி சிலையின் முன்பு நிற்கும்போது மகத்தான இருப்பு நம் அனை வரையும் அரவணைப்பதை உணர முடிகிறது. தற்போது யோகா பல எல்லைகளைக் கடந்து வந்துள் ளது. யோகாவுக்காக தற்போது பல்வேறு பள்ளிகள், பயிற்று முறைகள் இருந்தாலும் யோகா என்பது நிலையானது. யோகா புராதனமானது. ஆனால் நவீன மானது. அது வளர்ந்து கொண்டே இருக்கிறது. யோகாவின் சாரம் இன்னும் மாறவே இல்லை. இந்த சாரத்தை பேணிக்காப்பது மிகவும் முக்கியமானதாகும்.

சிவனை நினைக்கும்போது கயிலாய மலையும், பார்வதியை நினைத்தால் கன்னியாகுமரியும் நினைவுக்கு வரும். எனவே, சிவசக்தி சங்கமம் என்பது மலைகள் மற்றும் கடல்களின் சங்கமமாக அமைந் துள்ளது. இதுதான் நம் நாட்டின் ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது. சிவன் குடும்பமே வேற்றுமையில் ஒற்றுமை என்ற மரபைக் காட்டு கிறது. கடவுள்கள் அனைவரும் விலங்கு, பறவை, மரத்துடன் இணைந்துள்ளனர். கடவுளை வணங்கும்போது அவற்றையும் வணங்குகிறோம். அதனால்தான் ஒருமை உணர்வு, கனிவு, சகோதரத் துவத்துடன் வாழ்கிறோம். இந்தப் பண்பாட்டுடன்தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து மறைந் துள்ளனர்.

இந்த தேசத்தில் பெண்மைக்கு முக்கியத்துவம் தருவது பாராட்டுக் குரியது. பல இறைவிகளும், பெண் துறவிகளும் நம்மை வழிநடத்தியுள்ளனர். இனி பெண்கள் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவதுடன், பெண்கள் தலைமைப் பண்பை ஏற்பது குறித்துதான் பேச வேண்டும். பெண்களை மதிக்கும் சமூகமே மேன்மை அடையும்.

யோகா என்பது சிறந்த அறிவியல். நமது உடலை, மனதை மேம்படுத்தும் சக்தி கொண்டது. உலகம் முழுவதும் யோகா பரவி வருகிறது. நமது மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகத் திகழ்கிறது. எனவேதான், யோகாவைப் பரப்பு கிறோம். ஈஷா யோகா மையத்தில் சாதாரண மனிதர்களை யோகி களாக ஆக்குவது பாராட்டுக்குரியது என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீபத் நாயக், விஜய்கோயல் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in