

இன்று உலக காடுகள் தினம்
மனிதர்கள் இல்லாத ஊரில் பறவை களும் விலங்குகளும் உயிர் வாழும். ஆனால், அவைகள் இல்லாத ஊரில் மனிதர்கள் வாழ இயலாது. தற்போது வன விலங்கினங்களும், பறவையினங்களும் மெல்ல அழிந்து அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்று வருவது, மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழ்வது பெரும்பாலும் காடுகளில்தான். மனிதர்கள் ‘வளர்ச்சி’ என்ற ஒற்றை வார்த்தை யால் சாலைகளுக்காகவும், கான் கிரீட் கட்டிடங்களுக்காகவும், இயற் கைக் காடுகளை அழித்து செயற் கைக் காடுகளாக மாற்றி வரு கின்றனர். அதனால், வனவிலங்கு கள் தங்கள் வலசைப் (இடம் பெயர்வு) பாதைகளையும், வாழ் விடங்களையும் காணாது திசை தெரியாமல் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இப்படித்தான் கடந்த 5 ஆண்டாக கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, கொடைக்கானல், திருநெல்வேலி, விருதுநகர், தேனி, சேலம் போன்ற காடுகளைச் சார்ந்த மாவட்டங்களில் யானை, சிறுத்தை, புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின் றன. விவசாய நிலத்தை அழித்தும், மனித உயிர்ப் பலிகள் ஏற்படுத்தியும் வருகின்றன.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி உலக காடுகள் தினம் கொண் டாடப்படுகிறது. மரக்கன்றுகளை நட்டு, வளத்தைப் பெருக்குவது இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமாகக் கருதப்படு கிறது. இந்த நாட்களில் வனத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. அதன்படி உலக காடுகள் தினத்தில் மாணவர்களை, பொதுமக்களை அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் அழைத்துச் சென்று வனத்தின் பயன்பாடுகளையும், அங்கு வாழும் உயிரினங்களின் முக்கியத்துவத் தையும் எடுத்துக் கூறி காடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப டுத்துகின்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ் கூறியதாவது:
‘‘வனம்தான் பல்வேறு வகையான தாவரங்களுக்கும், விலங்குகளுக் கும் வீடாக இருக்கிறது. நாம் வீட்டைப் பராமரிப்பதுபோல் இந்த வன வீட்டையும் பாதுகாக்க வேண் டும். சர்வதேச அளவில் இந்தியா நல்ல வன வளத்தைக்கொண்ட ஒரு நாடாகக் கருதப்படுகிறது.
வெங்கடேஷ்
இமயமலை, கிழக்கு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகள் இந்தியாவில் வனப்பகுதிகளை அதிக அளவுகொண்ட பகுதி களாகும். உலகின் மிக பழமை யான மேற்குத்தொடர்ச்சி மலைகள் தென் இந்தியாவின் 6 மாநிலங் களை வாழவைக்கும் உழவுக்கு உயிரூட்டும் காவிரி, பவானி, நொய்யல், மோயாறு, அமராவதி, ஆழியாறு, கபினி, வைகை, தாமிரபரணி போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இருக்கின்றன. இங்கு இருக்கும் சோலைவனக் காடுகள் உலகில் வேறு எங்கும் இல்லை. இக்காடுகள் இல்லாமல் போயிருந்தால் தென் இந்தியாவே பாலைவனமாக இருந்திருக்கும்.
மனிதன் மட்டுமில்லாது, வன விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் வனத்தை நம்பியே இருக்கின்றன’’ என்றார்.
அழியும் காடுகள்
காந்திகிராம பல்கலைக்கழக தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு கூறும்போது, “உலக அளவில் 30 சதவீத நிலப் பகுதிகள் காடுகளால் சூழப்பட்டுள்ளன. இந்தியாவில் 19.2 சதவீதம் காடுகள் இருக்கின்றன. 600-க்கும் மேற்பட்ட வகையான மரங்கள் இருக்கின்றன. 17,500 வகையான பூக்கும் தாவரங்கள் இருக்கின்றன. சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் ஹேக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. அதாவது இங்கிலாந்து நாடு அளவுக்கு பரப்பளவுள்ள காடுகள் அழிந்து வருகின்றன. அதனால் 80 சதவீத பல்லுயிர் பெருக்கம் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், மரங்கள், வனவிலங்குகள் அழிப்பு போன்றவை காடுகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன” என்றார்.