

கர்நாடகத்தில் உற்பத்தி அதிகரிப்பால் தமிழகத்தில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை உள்ளிட்ட மழை குறைவாக இருக்கிற மாவட்டங்களில் பரவலாக வெங் காய உற்பத்தி நடை பெறுகிறது. தமிழகத்தில் வெங்காயத்தின் தேவை அதிகமாக இருப்பதால் மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 100 முதல் 150 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே வெங்காய விலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று உச்சகட்டமாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை தமிழகம் முழுவதுமே 8 ரூபாயில் இருந்து ரூ.14 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
மதுரை கீழமாரட் வீதி வெங்காய சந்தை வியாபாரி முத்துராமலிங்கம் கூறுகையில், மதுரையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.16 முதல் ரூ.10 வரை விற்பனையானது. பெரிய வெங்காயம் ரூ.14 முதல் ரூ.8 வரை விலை குறைந்துள்ளது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் சில்லரை வியாபாரம் அதிகரித்து மொத்த வியாபாரம் நஷ்டமடைந்துள்ளது. வெங்காயம் சமையலுக்கு மட்டுமே முழுக்க முழுக்க பயன்படுத்தப்படுகிறது. வெங்காயத்தில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப்பொருள் தயாரிக்கப்படுவதில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் அழுகிவிடாமல் இருக்க கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெங்காய அறுவடை அதி கரித்துள்ளது. விளைச்சல் அதி கரிப்பால் தற்போது விலை வீழ்ச் சியடைந்துள்ளது என்றார்.
இதுபற்றி திண்டுக்கல் வெங் காய ஏற்றுமதியாளர் கமிஷன் மண்டி வர்த்தர் சங்கத் தலைவர் ஏ.வி.சவுந்திரராஜன் கூறியது: ஒரு கிலோ மகாராஷ்டிரா பெரிய வெங்காயம், 10 ரூபாயில் இருந்து ரூ.14 வரையும், மைசூர் சின்னவெங்காயம், ஒரு கிலோ ரூ.7 முதல் ரூ.15 வரையும் விற்கிறது. மேலும் உற்பத்தி அதிகமாகி உள்ளது. உற்பத்தி அதிகரிப்பே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்றார்.