உயர் நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகளை குறைக்க முன்னாள் நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தம் உள்ள 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 38 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதனால் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கையை விரைந்து குறைக்க முடியாத நிலை உள்ளது.
உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமித்தால் நிலுவை யில் உள்ள வழக்குகள் எண்ணிக் கையைக் குறைக்க முடியும்.
அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது நிர்ணயம் செய்யப்படவில்லை. அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியாக பணியாற்றுகின்றனர். அவர்கள் விரும்பினால் ஓய்வுபெறலாம் என்ற நிலை உள்ளது.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகளை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மனு கொடுத்தேன். இந்திய அரசியல மைப்புச் சட்டப்பிரிவு 224(ஏ)-ன்படி ஓய்வுபெற்ற நீதிபதிகளை உயர் நீதிமன்ற தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத் தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு இம்மனுவை விசாரித்தனர். அப்போது எதிர்மனுதாரர் பட்டிய லில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கும்படி உத்தரவிட்டனர். மனு தாரர் ஏற்றுக்கொண்டதால், இவ் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
