கைதான ராம்குமார் அம்பு மட்டுமே: சுவாதி கொலையில் தீவிர விசாரணைக்கு ஹெச்.ராஜா கோரிக்கை

கைதான ராம்குமார் அம்பு மட்டுமே: சுவாதி கொலையில் தீவிர விசாரணைக்கு ஹெச்.ராஜா கோரிக்கை
Updated on
1 min read

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் அம்பு மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள வலிமையான சக்தி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: ராமஜெயம் கொலைவழக்குபோல இல்லாமல், 8 நாட்களுக்குள் சுவாதி கொலை வழக்கு குற்றவாளியைக் கண்டு பிடித்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பாராட்டுகள்.

ஆனால், இதில் அவிழ்க்கப் படாத மர்ம முடிச்சுகள் அதிகம் உள்ளன. 3 மாதங்கள் மட்டுமே சென்னையிலிருந்த ராம்குமார், சுவாதியிடம் காதலை தெரிவித்து, அவர் ஏற்க மறுத்ததால் கொலை செய்ததாகக் கூறுவது நம்பும்படி யாக இல்லை. அவர் பயன்படுத்திய கொலைக் கருவி, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதம்போல உள்ளது.

சென்னைக்கு வேலைதேடிச் சென்றவர், வீச்சரிவாளுடன் சென் றது ஏன்?. கொலை செய்வதற்காக ராம்குமார் சென்னைக்கு வரவழைக் கப்பட்டாரா என்று சந்தேகம் எழு கிறது. ராம்குமாரை கைது செய் ததிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

தமிழகத்தில் அநீதி, அக்கிரமங் கள் தொடர்கின்றன. சேலத்தில் வினுப்பிரியா தற்கொலைக்கு, போலீஸாரின் அலட்சியமே கார ணம். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இளம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை என் பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டு, உரிய தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் அம்பு மட்டுமே என்பது தெளிவாகிவிட்டது. எய்தவர் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்து, அவர்களுக்கு தண் டனை பெற்றுத்தர வேண்டும். இதன் பின்னணியில் வலிமையான சக்தி இருப்பதாக சந்தேகிக்கிறோம். எனவே, கொலையின் பின்னணி குறித்து காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். எந்த வகை யிலும், யாரையும் பாதுகாக்கும் செயலில் காவல்துறை ஈடுபடக்கூடாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in