கூடங்குளம் 2-வது அணு உலையில் 245 மெ.வா. மின் உற்பத்தி தொடக்கம்: மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது

கூடங்குளம் 2-வது அணு உலையில் 245 மெ.வா. மின் உற்பத்தி தொடக்கம்: மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது
Updated on
1 min read

கூடங்குளம் 2-வது அணு உலையில் நேற்று பகல் 11.17 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியது. பிற்பகல் 3 மணியளவில் 245 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத் திய மின்தொகுப்பில் இணைக்கப் பட்டதாக அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரி வித்தார்.

கூடங்குளத்தில் அமைக்கப்பட் டுள்ள இரு அணுஉலைகளும் ரஷ்ய நாட்டு உதவியுடன் வடிவ மைத்து கட்டப்பட்டவை. இதில், 2-வது அணுஉலையில் மொத்தம் 163 எரிபொருள் கற்றைகள் நிரப்பப் பட்டுள்ளன.

இவற்றில் மொத்தம் 80 டன் யுரேனியம் ஆக்ஸைடு உள்ளது. எரிபொருள் நிரப்பிய பின் தகுந்த வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அணுஉலையில் கிரிட்டி காலிட்டி எனப்படும் மின் உற்பத் திக்கு முந்தைய அணுப்பிளவு தொடர்வினை கடந்த ஜூலை 10-ம் தேதி இரவு 8.56 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்திய அணுசக்தி கழகப் பொறி யாளர்கள், விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள், அணுசக்தி ஒழுங் கமைப்பு வாரிய குழு அதிகாரிகள் இந்த செயலாக்க தொடக்க பணி களை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் 2-வது அணு உலையில் மின்உற்பத்திக்கு அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரியம் அனுமதி அளித்ததை அடுத்து நேற்று பகல் 11.17 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியது. பிற்பகல் 3 மணியளவில் 245 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்ட தாக அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரி வித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

மின்உற்பத்தி தொடங்கி சில நாட்களில் ஆய்வுக்காக அணு உலையின் செயல்பாடு படிப்படி யாக நிறுத்தப்படும். பின்னர் அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் அனுமதியுடன் மீண்டும் மின் உற் பத்தி செய்யப்பட்டு 50, 70, 90, 100 சதவீதம் என்று அடுத்தடுத்த கட்டங்களாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை முதலா வது அணுஉலையில் 11,269 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in