ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் ‘இந்திய இளம் விஞ்ஞானி 2016’ விருதுக்கான போட்டி

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் ‘இந்திய இளம் விஞ்ஞானி 2016’ விருதுக்கான போட்டி
Updated on
1 min read

அப்துல் கலாம் சர்வதேச அமைப்பு, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், மாஸ்கோ விண்வெளி பயண நிறுவனம் ஆகியவற்றுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு இணைந்து ‘இந்திய இளம் விஞ்ஞானி 2016' விருதுக்கான போட்டியை நடத்தியது.

இது தொடர்பாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் குறித்து சர்வதேச அளவிலான புரிதலை ஏற்படுத்தும் பணிகளில் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. நாசாவின் விண்வெளி முகாம்கள், ஐரோப்பிய விண்வெளி மையம் ஆகியவற்றின் முதல் தூதராக உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் சமீபத்தில் மாஸ்கோவில் உள்ள ஸ்டார் சிட்டிக்கும் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களைக் கொண்டு விண்வெளிக்கு அருகில் ஏவு வாகனத்தை செலுத்தி, அதன் மூலம் தரவுகளை பெற்று வெற்றி கண்டது. இதன் மூலம் லிம்கா சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி வீரர் ஷலிஸான் ஷரிபாவ், அமெரிக்காவின் மார்ஷா இவின்ஸ் ஆகியோரை இந்தியாவுக்கு வரச்செய்த ஸ்பேஸ் கிட்ஸ் அவர்களின் அனுபவங்களை இந்திய மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளச் செய்தது.

இந்திய மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி “இந்திய இளம் விஞ்ஞானி” விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிக்கு 586 மாணவ மாணவிகள் தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து தெரிவித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

அவர்களின் 85 பேரின் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்று கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. அவர்கள் தங்களின் வடிவமைப்பில் உருவான பொருட்களை காட்சிப்படுத் தியிருந்தனர். சிறந்த வல்லுநர்களைக் கொண்டு அவை ஆய்வு செய்யப்பட்டு அவர்களில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 17 பேருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது. அந்த தலைப்பில் அவர்களை 2 நிமிட நேரம் பேசச் செய்து, 5 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in