

போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் ஆளுங்கட்சியினர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது என்ன வகை ஜனநாயகமோ என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நீடிப்பதைப் பார்த்துக் கொண்டிராமல், பிரச்சினையை பரிவுடன் தீர்க்க மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
சென்னை மாநகராட்சி மன்றத் தில் மேயரே தீர்ப்பைக் கடுமை யாக விமர்சித்தும் என்னைத் தாக்கியும் பேசுகிறார். அதைப் பற்றி கேள்வி கேட்ட திமுக உறுப்பி னர்கள் மீது வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கிறது. இவை யெல்லாம் என்ன வகை ஜன நாயகமோ?
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று 200 அதிமுகவினர் ஊர்வலமாக என் வீட்டுக்கே வந்து கல்லெறிந்து தாக்குதல் நடத்திவிட்டு, அவர்களே காவல் நிலையத்திற்குச் சென்று, அவர்கள் மீது நான் தாக்குதல் நடத்த தூண்டியதாக புகார் கொடுத்துள்ளனர். அதிமுக வினரின் இத்தகைய போராட்டங் களைத்தான் அனைத்துக் கட்சியி னரும் கண்டித்துள்ளனர்.
ஜெயலலிதா, 1991-96-ம் ஆண்டு களில் முதல்வராக இருந்த போது அவருடைய வருமானம் ரூ.9.91 கோடி. அந்தக் காலக்கட் டத்தில் அவர் செய்த செலவுகள் ரூ.8.49 கோடி. அதே காலகட்டத்தில் அவரது அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.53.60 கோடியாக உயர்ந் துள்ளது.
இந்த அசையா சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரின் கணக்குகளில் வருகின்றன. எந்த வழியில் வந்தன என்பதற்கு குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் ஆவணங்கள் இல்லை. அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை.
அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது.
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று நீதிமொழி அறிவுறுத் துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால்,ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார். இவை எல்லாம் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள வாசகங்களாகும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.