

சென்னையில் கார் விபத்தில் கூலித் தொழிலாளி இறக்க காரணமாக இருந்த இளம்பெண் ஐஸ்வர்யா வின் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யா வி்ல்டன். கடந்த ஜூலை 1-ம் தேதி காரை ஓட்டிச்சென்று மோதியதில் முனுசாமி என்ற கூலித் தொழிலாளி இறக்க காரணமாக இருந்தாக இவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நடந்தது.
ஐஸ்வர்யா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமாரும், அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வெங்கட்ரமணியும் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.