மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 7-ம் தேதி திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 7-ம் தேதி திருக்கல்யாணம்
Updated on
1 min read

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி யது. திருவிழாவின் முக்கிய அம்ச மான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 7-ம் தேதி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் வெகுசிறப்பாக நடைபெற்று வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திரு விழா, நேற்று காலை 9.50 மணியள வில் கொடியேற்றத்துடன் தொடங் கியது. சிறப்பு அலங்காரம் செய் யப்பட்டிருந்த கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, வெகுவிமரிசையாக கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

சித்திரை திருவிழாவை முன் னிட்டு தினமும் காலை, இரவு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்தி கள் வீதியுலா நடைபெறவுள்ளது. வரும் மே 5-ம் தேதி இரவு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடை பெறுவதுடன், அம்மனுக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப் படும். மே 6 அன்று திக்குவிஜயம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 7-ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது.

மே 8-ம் தேதி காலை 6 மணியளவில் மீனாட்சி அம்மனின் தேரோட்டம் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in