

தமிழ்நாடு - புதுச்சேரி வழக் கறிஞர்கள் கூட்டமைப்பின் தலை வர் எஸ்.கே.வேல் நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய சட்ட ஆணைய சட்ட திருத்த பரிந்துரைகள், வழக் கறிஞர்களுடைய உரிமைகளை பாதிக்கும் வகையிலும், மிரட்டும் வகையிலும், சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலையிலும் உள்ளது.
எனவே, சட்ட ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 3-ம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத் துள்ளது.
இதனை ஏற்று தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பர். மேலும் அன்று பகல் 12 மணியளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றார்.