திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: இம்முறை 18 தனித் தொகுதிகள் வழங்கல்

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: இம்முறை 18 தனித் தொகுதிகள் வழங்கல்
Updated on
1 min read

கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, இம்முறை 18 தனித் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக வழங்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் விதமாக கடந்த ஒருவாரமாக தோழமை கட்சிகளுடன் திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்டார். அதன்படி மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சீர்காழி தவிர்த்து இதர தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்.

அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு, ஸ்ரீவைகுண்டம், காரைக்குடி, திருவாடானை, நாங்குநேரி, ஊத்தங்கரை(தனி), சோளிங்கர், கடலூர், மயிலாடுதுறை, அறந்தாங்கி, சிவகாசி, வேளச்சேரி, துறையூர்(தனி), ஊட்டி, கிருஷ்ணகிரி, ஆத்தூர்(தனி), ஈரோடு கிழக்கு, சிங்காநல்லூர், உசிலம்பட்டி, பென்னாகரம், பொன்னேரி (தனி), சங்கரன்கோவில், கவுண்டம்பாளையம், அம்பாசமுத்திரம், பெரும்புதூர்(தனி), மேலூர் ஆகிய 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தளி, திருத்துறைப்பூண்டி (தனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி) மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கீழ்வேளூர் (தனி), கந்தர்வக்கோட்டை (தனி), பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூர் என தலா 5 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. விசிகவுக்கு காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), பண்ரூட்டி ஆகிய 8 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.

தேமுதிகவை பொறுத்தவரை விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம் (தனி), சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மயிலம் ஆகிய 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு பாபநாசம், வாணியம்பாடி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக கட்சிக்கு திருச்செங்கோடு, பொள்ளாச்சி, மமக-வுக்கு நாகப்பட்டினம், மணப்பாறை, முக்குலத்தோர் புலிப்படைக்கு சிவகங்கை, மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சிதம்பரம், எஸ்டிபிஐ-க்கு நன்னிலம், தமிழர் தேசம் கட்சிக்கு நத்தம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் போக, மீதமுள்ள 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. சில கூட்டணி கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கின்றன. அந்தவகையில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: இம்முறை 18 தனித் தொகுதிகள் வழங்கல்
“இந்தத் தேர்தலோடு கருணாநிதி குடும்பத்துக்கு முற்றுப்புள்ளி” - பிரச்சாரத்தில் பொங்கிய பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in