

அதிமுக 3 அணிகளாகப் பிரிந்துள்ள தால் திமுக கூட்டணிக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித் துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகரில் கடந்த முறை கூட்டணிக் கட்சியான திமுக போட்டியிட்டது. தற்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி யிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப் படும். அதிமுக 3 அணிகளாகப் பிரிந்து கிடப்பதால் திமுக கூட்ட ணிக்கு இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம். இத்தேர்தலை பணப்பட்டுவாடா இல்லாத வகை யில் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலையும் விரைந்து நடத்த தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முன்வர வேண்டும்.
சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்தை ராமேசுவரத்தில் சந்தித்துப் பேசினேன். கடந்தகால பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு பின்பற்றவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக மீனவர்களிட மிருந்து 135 படகுகளை இலங்கை அரசு கைப்பற்றியுள்ளது. ஆனால் அதில் ஒரு படகைக்கூட இந்திய அரசு மீட்கவில்லை. தமிழக மீனவர் கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இவ் விவகாரம் குறித்து விசா ரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அல்லது மூத்த மத்திய அமைச்சர்கள் வர வேண்டும் என்பதில் போராட்டத்தில் உள்ள மக்கள் உறுதியாக உள்ளனர். மீனவரைச் சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். இறந்த மீனவர் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் வழங் கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரூ.25 லட்சமும், இலங்கை அரசிடமிருந்து ரூ.1 கோடியையும் அந்த குடும்பத்துக்கு நஷ்டஈடாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைகளைக் கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திமுகவுடன் கூட்டணியா?
இதற்கிடையே ஈரோட்டில் திரு நாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘திமுகவுடன் நாங்கள் எங்கு சேர்ந்தோம்; எங்கு விலகி னோம்? சேரல் இருந்தால்தானே விலகல் இருக்க முடியும். தேர்தல் வந்தால் கூட்டணி குறித்து பேசுவோம். விலகுதல், இணைந்தே இருத்தல் இதெல்லாம் பிரச்சினை இல்லை’’ என்றார்.