

சென்னை மாவட்டத்தில் 485 அங்கன்வாடி பணியாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் 151 அங்கன்வாடி பணியாளர், 36 குறு அங்கன்வாடி பணியாளர், 298 அங்கன்வாடி உதவியாளர் (மொத்தம் 485 பணியிடங்கள்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவி யாளர் பணிக்கு வயது 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியாக உள்ள மையங்கள், இட ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் வெளியிடப்படும். உள்ளூர் பெண் கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங் களைக் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள லாம். மேலும் www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந் தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங் களை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் நவம்பர் மாதம் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய வேண்டுமானால், அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரியை அணுகலாம்.