Published : 18 Jun 2016 10:43 AM
Last Updated : 18 Jun 2016 10:43 AM

‘தி இந்து’ - பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர்: 39-வது வாரமாக இன்று ஒளிபரப்பு

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை எடுத்துக் கூறும் ‘குறை யொன்றுமில்லை’ என்ற வரலாற்றுத் தொடர் பொதிகை தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகைப்படங்கள், பாடல்கள், அவரது இசை ஆளுமை சார்ந்த தகவல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியை ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி வழங்கி வருகிறது.

ரவீந்திரநாத் தாகூர் பற்றிய ஒரு அறிமுகத்தோடு ‘ரவீந்திர சங்கீத்’ என்ற பெங்காலி மொழிப் பக்திப்பாடல்களும், நவக்கிரக கீர்த்தனைகளும் இந்த வார நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. நிகழ்ச்சியின் நிறைவாக சைத்தன்ய மகாபிரபு எழுதிய ‘சிக்‌ஷா அஷ்டகம்’ சமஸ்கிருத பாடல்கள் தனித்த கவனத்தை ஈர்க்கும்.

பொதிகை தொலைக்காட்சியில் 39 -வது வாரமாக, இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x