அரசு விரைவு பேருந்துகளில் தத்கால் முன்பதிவு முறை அறிமுகம்

அரசு விரைவு பேருந்துகளில் தத்கால் முன்பதிவு முறை அறிமுகம்
Updated on
1 min read

அரசு விரைவுப் பேருந்துகளில் தத்கால் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வரு மாறு:

சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து நட வடிக்கை மேற்கொள்ள வசதியாக 10 சரகங்களுக்கும் ரூ.95 லட்சம் செலவில் அதிவேகம் கண்டறியும் கருவிகள் (ஸ்பீட் ரேடர் கன்ஸ்) வழங்கப்படும். திருவள்ளூர் மாவட் டம் பாலவாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் காளிக்கோவில் ஆகிய 2 இடங்களில் ரூ.40 லட்சம் செலவில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.

அரசின் திட்டங்கள், அறிவிப்பு கள், சாலை பாதுகாப்பு தகவல்கள், சாலை பாதுகாப்பு விதிகளைத் தெரி யப்படுத்தும் வகையில் 20 வட்டார போக்குவரத்து அலுவலகங் களுக்குப் பல்லூடக படக் கருவி (மல்டி மீடியா எல்இடி திரை) ரூ.14 லட்சம் செலவில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள தானியங்கி பணிமனைகளில் அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும்.

சாலை போக்குவரத்து நிறு வனத்தின் கீழ் இயங்கும் பெருந் துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2018-19 கல்வி ஆண்டு முதல் மருத்துவ முதுநிலை மேற்படிப்புகள் (எம்.டி) தொடங்குவதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ் வொரு போக்குவரத்து கழகத்தில் இருந்தும் ஆண்டு முழுவதும் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுத் தாத பணிமனை ஒன்று தேர்ந் தெடுக்கப்பட்டு அதற்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அவசர வேலை காரணமாக உடனடியாக பயணம் மேற் கொள்ள வேண்டிய பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் இதர அரசு போக்குவரத்துக் கழகங்களின் நெடுந்தூர பேருந்து களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த முறையில் பேருந்து ஒன்றுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கப்படும்.

மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெடுந்தூர பேருந்துகளுக்கு செல்போன் தனி செயலி (மொபைல் ஆப்) வழி டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in